சீயோனிலும் நம் குடும்பத்திலும், ஏன் ஒருவர், ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது அனுதாபம் ஏற்படுத்தக்கூடும், ஆனால் அதற்கான காரணத்தை அறியாமல், நாம் அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, கோபமடைந்து, இறுதியில் எதிரிகளாக மாறிவிடக்கூடும்.
எனவேதான் தேவன் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்தில் கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிய உடன்படிக்கையின் முக்கியமான போதனையாக “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்பதை குறிப்பிட்டு கான்பித்தார்.
தந்தையும் தாயும் தங்களுக்காக அனுபவித்த துன்பங்களையும், வலிகளையும், அவமானங்களையும், அவதூறுகளையும் தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் பிரதிபலித்துப் பார்த்து, தங்களுக்காக மட்டுமே வாழ்ந்த தங்கள் பழைய ஆத்துமாவை களைத்துவிட்டு, ஒருவரையொருவர் கருதும் புதியவர்களாக மாற முயற்சி செய்கிறார்கள். ஒருவருக்கொருவர் அன்பைப் பயிற்சி செய்கிறார்கள்.
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். . . தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். 1 யோவான் 4:16–21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை